Thursday, June 13, 2013

அழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.


செல்லப்பிராணிகள் மற்றும் விலங்கினங்களின் அழகான தருனங்களை புகைப்படத்தில் கொடுத்து பல வாசகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ள ஒரு தளத்தைப்பற்றித்தான் இந்தப்பதிவு.அணில் முதல் வவ்வால் வரை , குரங்கு முதல் யானை வரை, தவளை முதல் முதலை வரை என் அனைத்து உயிரினங்களின் அழாகன படங்களையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நம்மை மகிழ்ச்சி அடைய வைக்கும் இத்தளத்தைப் பற்றி இனி பார்க்கலாம்.




இணையதள முகவரி : http://www.cutestpaw.com
CUTE ANIMALS FOR YOU என்ற இத்தளத்திற்கு சென்று நாம் அழகான பல உயிரினங்களின் தத்ரூபமான புகைப்படங்களை ரசிக்கலாம். இதுவரை எந்த தளங்களிலும் நாம் பார்த்திருக்காதபடி விலங்கினங்களின் அழகான புகைப்படங்கள் பல இத்தளத்தில் இடம் பிடித்துள்ளது, இடது பக்கம் இருக்கும் Categories என்பதில் எந்த உயிரினத்தைப்பற்றிய புகைப்படம் வேண்டுமோ அதை சொடுக்கி குறிப்பிட்டஉயிரினத்தின் புகைப்படத்தை பார்க்கலாம், நம்மிடம் இருக்கும் நம் செல்லப்பிராணிகளின் புகைப்படத்தையும் கூட பதிவேற்றலாம்.  நாம் பார்க்கும் புகைப்படத்தை நம் கணினியில் சேமித்து வைக்கலாம், டிவிட்டர், பேஸ்புக் போன்ற சோசியல் நெட்வொர்க்-களில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.  புதுமை விரும்பிகளுக்கும் அழகான உயிரினங்களை பார்க்க விரும்பும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

0 Comments:

Post a Comment